Sunday 8 September 2019

ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவா, அருளிய நமது தர்மம்


Namathu Dharmam- forward- 
நமது தர்மம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவா, அருளிய நமது தர்மம் பற்றிய அருமையான அற்புதமான விளக்கங்கள். சாதாரணர்களுக்கும் புரியும் படியான, ஏற்றுக் கொள்ளும்படியான எளிமையான விளக்கங்கள் இந்தப் புத்தகத்தில் நம்மை வியக்கவைக்கின்றன.
1932 ம் வருடம் செப்டம்பர் மாதம் மகா பெரயவர்கள் சென்னை விஜயம் செய்தபோது அருளிய பொன்மொழிகளின் சாராம்சம் அடங்கிய பொக்கிஷம் இது. நம் மனசுக்குள் அன்றும் இன்றும் என்றும் நீங்கா இடம் பிடித்துக் கொண்டு நம்மை ஆட்டிப்படைக்கும் நம் மதம் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் தான் இந்தப் புத்தகம்.
‘எப்பவும் பாட்டி சொன்னா, தாத்தா சொன்னான்னு அதையேதான் செய்யணுமா, நமக்குன்னு தோணறதை செய்யக் கூடாதா?’
இந்தக் கேள்வி வராத குடும்பமே இருக்க முடியாது. பெரியவா அழகா விளக்கம் சொல்றார். “ நாமாக ஒன்றை பிடித்துக் கொண்டால் வீண் அலைச்சல். அது நல்லதோ கெட்டதோ என்று சந்தேகம். அதனால் முன்பே பெரியவர்களால் அனுஷ்டிக்கப்பட்டு நமக்கென்று ஏற்பட்ட தர்மத்தை பின்பற்றுவதே நல்லது.” என்கிறார்.
‘இஸ்லாமியர்களுக்கு குரான், கிறிஸ்தவர் களுக்கு பைபிள் ன்னு டக் னு சொல்ல ஒரு புனித நூல் இருக்கு. நமக்கு ஏன் எதை சொல்றதுன்னு தெரியாம ஒரே குழப்பமா இருக்கு?’
பெரியவா, தெளிவா விளக்கம் கொடுக்கிறார். ‘ நம்ம மதத்துல மதம் பற்றிய படிப்பே கிடையாது. தர்மம் என்பதுதான் நமது மதம். தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களுக்கு சாதனமாக இருப்பதுதான் மதம். இதை விளக்குவதற்கு புருஷார்த்தங்கள் எனப்படும் பதினான்கு வித்தியாஸ்தானங்கள் இருக்கின்றன. அவற்றை சிறு வயதிலேயே படிப்பது, படிப்பதை தெரிந்து கொள்வது. தெரிந்து கொண்டபடி நடப்பது, மற்றவர்களையும் அப்படியே நடந்து கொள்ள வைப்பது ‘ என்று  பெரியவா வாக்குகளைப் படிக்கும்போது நம் மனம் முழுவதும் பெரியவா ஆக்ரமித்துக் கொள்கிறார்.
திவச மந்திரத்தை ஏன் சமஸ்க்ருதத்தில்தான் சொல்லவேண்டும்?
பசி என்கிற வியாதிக்கும் வேறு வியாதிகளுக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் என்ன?
சங்கீதம் – சாஹித்யம் இரண்டுக்கும் வித்தியாசம் சொல்கிறார் பாருங்கள். படித்து அனுபவிக்க வேண்டும்.மோக்ஷத்தை பரலோகம் என்று பிற மதங்கள் சொல்கின்றன. நம் ப்ரமாண க்ரந்தங்கள் பரலோகம் என்கிற மோக்ஷத்தை இங்கேயே அடைய வழிகாட்டுகிறது. அதுதான் இந்து மதத்தின் தனி சிறப்பு.
இப்படி எத்தனையோ பொக்கிஷங்கள். படித்துப் பரவசமடைவதற்கு.
ஜெய ஜெய ஷங்கர ஹர ஹர ஷங்கர! காஞ்சி ஷங்கர, காமகோடி ஷங்கர!
பெரியவா சரணம்! குருவே சரணம்!
Dr.ஷ்யாமா ஸ்வாமிநாதன், 5/1௦/2௦17
Dharini Padhippagam, 
4 A,Ramea Flats
32/79 Gandhi Nagar 4th Main Road
Adyar, CHENNAI-600020
PH.24400135
Mobile:9940120341

தாரிணி பதிப்பகம்

தாரிணி என்ற சொல்லுக்கு பூமி, என்றும் இலவமரம் என்று இரு பொருள் தருகிறது அகராதி.தாரணி என்பதும் உலகம் என்ற பொருளைத்தருவது தான்.
என் பதிப்பகத்திற்கு கடிதம் எழுதுவோர் சிலர் தாரணி பதிப்பகம் என்றே எழுதுகிறார்கள். சிறிதுநாட்கள் செயல்படாமல் விட்ட இப்பதிவை இனித்தொடர்வேன்.
ஆனால் என் பதிப்பகத்தின் பெயர்  தாரிணி பதிப்பகம் தான். ஆங்கிலத்தில் Dharini padhippagam 
 தாரணி(धारणी) என்பது ஒரு விதமான புனித சொற்கோர்வை ஆகும். இந்த சொற்கோர்வை சடங்குகளிலும், சில செயலகள் நடைபெற வேண்டியும் இது உச்சாடனம் செய்யப்படும். மந்திரங்களும் தாரணியும் நெருங்கிய தொடர்புடைய சில சமங்களில் ஒத்த பொருளைடைய சொற்களாகவே கருதப்படுகின்றன. எனினும் இவ்விரண்டின் பயன்பாடு வேறு வேறு ஆகும்.
ஜப்பானில் ஷிங்கோன் பௌத்தத்தை நிறுவுன கூக்காய் தாரணியையும் மந்திரங்களையும் இவ்வாறாக வேறுபடுத்துகின்றார். மந்திரங்கள் பௌத்த மறைபொருள்(esoteric) சடங்குகளில் பயன்படுத்த வேண்டியவை. அப்படியுருக்க, தாரணிகளில் எல்லா பௌத்த சடங்குகளிலும் பயன்படுத்த இயலும். தாரணிகள் பாளி சூத்திரங்களிலும் காணப்படுகின்றன.
தாரணி(धारणी) என்ற சொல் திரு(धृ)என்ற சொல்லில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. திரு(धृ) என்றால் பெற்றிருத்தல்,வைத்திருத்தல் என்று பொருள். எனவே தாரணி என்பது ஒரு சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் தன்னுள் அடக்கிய வாக்கியம் என கருதாலம். தாரணிகள் பொதுவாக நண்மைகள் நடைபெறவும் இன்னல்களிலிருந்து விடுபடவும் உச்சாடனம் செய்யப்படுகின்றன.
தாரணிகளையும் மந்திரங்களையும் வேறுபடுத்துதல் மிகவும் கடினம். அனைத்து மந்திரங்களையும் தாரணிகள் எனக்கொள்ளலாம் ஆனால் அனைது தாரணிகளையும் மந்திரங்கள் எனக்கொள்ள இயலாது. மந்திரங்கள் பொதுவாக குறைவான அளவுடையவை மேலும் அதிகமாக நேரடிப்பொருளற்ற எழுத்துக்களையும் சொற்களையும் கொண்டிருப்பவை. உதாரண்மாக, ஹூம், பட், ஹ்ரீ:,த்ராம் போன்றியவைகளை குறிப்பிடலாம். கூக்காய் மந்திரஙக்ளை தரணிகளின் ஒரு சிறப்பு வகையாக கருதினா. அவரைப்பொருத்த வரையில் தாரணியின் ஒவ்வொரு எழுத்தும் உணமையின் வெளிப்பாடாகும்.
(எ.டு) அவலோகிதேஷ்வரரின் ஆர்ய ஏகா தசமுக தாரணி(பொருள்:உயரிய பதினோருமுக தாரணி. திபெத்தியர்களின் மஹாகருணா தாரணி) 
நமோ ரத்னத்ர்யாயே நம: ஆர்யஜ்ஞான சாகர வைரோசன வ்யூஹராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்ஸம்புத்தாய:
நம: ஸர்வ ததாகதேப்ய: அர்ஹதேப்ய: சம்யக்ஸம்புத்தேப்ய:
நம: ஆர்ய அவலோகிதேஷ்வராய போதிசத்த்வாய மஹாசத்த்வாய மஹாகருனிகாய:
தத்யதா: ஓம் தர தர திரி திரி துரு துரு இதியே விதியே சலே சலே
ப்ராசலே குசுமே குசும்வரயே இலி மிலி ஜ்வாலம் அப்னயே ஸ்வாஹா


Wednesday 28 September 2016


‘கண்டதும் காதல்’ (love at first sight ) என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்களாக இராமனும் சீதையும் ஒருவரைக் கண்டு ஒருவர் விரும்பியதையும், இராமன் சென்றதும், காதல் நோய் கொண்டு சீதை தவித்ததையும், இராமன் சீதை நினைவால் என்கியதையும் 56 பாக்களில் விளக்கி உள்ளார் கவிச் சக்கரவர்த்தி கம்பர். அப்பாக்களில், இராமனும் சீதையும், ‘கண்டதும் காதல் கொண்ட’ பாக்கள் இரண்டை மட்டும் காண்போம்:
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வு ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.  - 1.519
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்.  --  1.521
எண்ணிப் பார்க்கக் கூட இயலாத நற்குணங்களைப் (பெற்ற) இத்தன்மையை உடையவள்(சீதை) (கன்னி மாடத்தில்) நின்று கொண்டிருந்த பொழுது, ஒருவர் கண்ணை மற்றவர் கண்கள் கவ்வி விழுங்கவும், (என்ன செய்வது என்று அறியாது) நிலையாக நிற்க முடியாமல், உணர்வுகள் (ஒருவரோடு ஒருவர்) பின்னிக் கொள்ள, மேன்மை மிகுந்த (இராமனும்) நோக்கினான், அவளும் (சீதையும் இராமனைத் திரும்ப) நோக்கினாள்.
ஒருவரை ஒருவர் கண்களால் பருகியதால் ஏற்பட்ட காதலால், ஒருவரின் உள்ளத்தை மற்றொருவரின் உள்ளம் தன்னிடத்தில் இழுத்துக் கொண்டதால், சிறந்த வில்லை ஏந்திய மாந்தரில் சிறந்தவரும் (இராமனும்), வாள் போன்ற (பார்வையாலே வெல்லக்கூடிய) கண்ணுடைய நங்கையும் (சீதையும்), ஒருவர் இதயத்தில் மற்றவர் குடியேறினர்.
எப்படிப்பட்ட வர்ணனை!  ஒருவரை ஒருவர் விழிகளால் கவ்வி விழுங்கிக் கொள்கிறார்களாம்!  அதனால் நிலை தடுமாறுகிறார்களாம், உள்ளத்தைப் பறிகொடுத்து, ஒருவர் இதயத்தில் மற்றொருவர் இடம் பிடித்துக் கொள்கிறார்களாம்.  தூய காதலுக்கு இதைவிட விளக்கம் வேண்டுமா என்ன?
                                                                                   ஒப்பீடு
முதலில் வால்மீகி முனிவர் இந்த நிகழ்ச்சியை ஏன் எழுதவில்லை என்பதற்குக் காரணம் ஆரண்ய காண்டத்தில் இருக்கும் இரண்டு சுலோகங்களில் (3.87.4, 3.87.10) கிடைக்கிறது.
இராவணன் அந்தண வேடமிட்டு, சீதையைக் கவர வருகிறான்.  அவனை ஒரு முனிவர் என்று நினைத்த சீதை, வரவேற்று, அவன் அமர தர்ப்பைப் புற்களால் நெய்யப்பட்ட இருக்கையை அளிக்கிறாள்.  தன்னைப் பற்றிச் சொல்லும் @பாது,
உஷித்வா த்வாதஸ’ ஸமா: இக்ஷ்வாகூணாம் நிவேஸ’னே ந
புஞ்ஜானா மானுஷானு போகானு ஸர்வ காம ஸம்ருத்திநீ நந 3-47-8
இக்ஷ்வாகுகளின் இல்லத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வசித்து, மனிதர்களின் அனைத்து இன்பங்களையும் நன்றாக அடையப்பட்டவள் ஆனேன். (என்னுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன.)
(பிறகு கைகேயியின் தூண்டுதலால் பதினான்கு ஆண்டுகள் கானகம் வர நேர்ந்தது என்று தெரிவித்த சீதை, புறப்பட்ட சமயத்தில் தங்கள் வயது என்ன என்று அறிவிக்கிறாள்.)
மம பர்த்தா மஹாதேஜா வயஸா பஞ்ச விம்ஸ’க: ந
அஷ்டா தஸ’ ஹி வர்ஷாணி மாமா ஜன்மனி கன்யதே நந 3-47-10
பேரொளி கொண்ட என் கணவர் இருபத்தைந்து வயதானவர். என் வயது பதினெட்டு ஆண்டுகளாகவே எண்ணப்பட்டது.
அவள் 12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்ததற்குப் பிறகு, தனக்கும் தன் கணவருக்கும் என்ன வயது என்று ஐயத்திற்கு இடமின்றி சீதை இராவணனிடம் உரைக்கின்றதாக வால்மீகி எழுதியிருக்கிறார்.
மனக்கணக்குப் போட்டப் பார்த்தால், சீதை இராமனை மணந்த @பாது அவளுக்கு ஆறே வயது (18-12=6) என்று விளங்கும்.  இராமனுக்கு பதிமூன்று ஆண்டுகள் நிரம்பி இருந்தன. அந்த வயதில் ஆறு வயதுச் சிறுமியான சீதைக்குக் காதல் என்ற உணர்வு தோன்ற வழி இல்லையே! அதனாலேயே, திருமணத்துக்கு முன் அவர்கள் சந்தித்ததாக வால்மீகி எழுதவில்ல என்று புலனாகிறது.
வால்மீகியின் இராமாயணத்தை நன்கறிந்த மகாகவி கம்பர் ஏன் இப்படி மாற்றி எழுதத் துணிந்தார்?  இதற்கு தமிழ் நாட்டின் களவு, கற்பு இவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூறித்தான் விளக்க வேண்டும்.
http://dhaariniulagam.blogspot.in/
Contact: Dharini Padhippagam, 32/79, Gandhi Nagar Fourth Main Road, Adyar, Chennai-600020Ph.919940120341

Wednesday 11 June 2014

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள் 
[இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com
இந்த மெகா சிறுகதைத் தொகுப்புக்கு கல்கி அளித்த கௌரவம்

Sunday 9 February 2014

இயலா நிலையினருக்கான கல்வி



      இயலா நிலையினருக்கான கல்வி

1.
பார்வையற்றோர்


2.
குறைப்பார்வையுடையோர்


3.
காதுகேளாதோர்


4.
மனவளர்ச்சி குன்றியோர்



5.
கை கால் இயக்கக் குறைபாடு உள்ளோர்


6.
மூளை வாதம்


7.
கற்றலில் குறைபாடுள்ள


 மாற்றுத் திறனாளிகளுக்கு எளிய பயனுள்ள முறையில் கல்வி கற்பிப்பது எப்படி என்றும் அன்றாட வாழ்வில் அவர்கள் இயல்பாக இயங்க உதவுவது என்றும் விளக்கமான படங்களுடன் விவரிக்கும் நூல் இது
மேலும் அவர்களுக்கு

 

8.
ஊனமுற்றோர் இயக்குநரகம் மூலம் கிடைக்கும் உதவிகள்


9.
ஊனமுற்றோர்க்கு இந்திய அரசு வழங்கும் சலுகைகள்
விவரமாக விளக்கப்பட்டுள்ளன 


332 பக்கங்கள்  விலை. ரூபாய்.250/=

[இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 

Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com
 


                                

அல்லாவின் திருப்பெயர்கள் 99

அல்-கபீர் (பெரியவன்)
இதை அதிக அதிகமாக ஓதி வருபவர்கள் இறை ஞானம் பெற்று,  தீயவர்களிடமிருந்து விடுபடுவர். அவர்களுடைய மதிப்பு உயரும்,
அல்-ஹாபீஃஸ் (காப்பாற்றுவோன்)
இதனை ஓதுபவர்கள் விபத்திலிருந்தும், வனவிலங்குகளிடமிருந்து காப்பாற்றப்படுவார்கள். இறைகாவல் எப்பொழுதும் இருக்கும். தீமை அகலும்,  ஆபத்துக்கள் நீங்கும்.
அல்-முகீத் (உறுதிப்படுத்துவோன்)
இதை ஓதுபவர்கள் நோன்பு நோட்கும் ஆற்றல் பெறுவர்,  அயச்சம் அகலும்,  வறுமை,  தீயகுணம்,  பீடை அகலும். சகல நோய்களும் நீங்கும்.
இதை ஓதுபவருக்கு எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாப்பு பெறுவர்.  அச்சம் பயம் அகலும்,  தொற்று நோய்கள் அகலும்.
அல்-ஜலீல் (உயர்வானவன்)
இதை ஓதுபவர்கள் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெறுவர்,  இறையருள் கிட்டும்,  கண்ணியம் ஏற்படும்.
அர்-ரகீப் (கவனிப்பவன்)
இதை ஓதுபவருக்கு பரக்கத் ஏற்படும்,  வேதனைகள் அகலும்,  நீர் நெருப்பு,  பகைவர்கள், கள்வர்களிலிருந்து பாதுகாப்பு பெறுவர், பெற்றோர்கள் இதை அதிகமதிகமாக குழந்தைகள் நலமாக வாழ்வார்கள்.
அல்-முஜீப் (பதிலளிப்போன்)
இதை ஓதுபவருடைய மனைவி, மக்கள் சுற்றத்தார் நண்பர் ஆகியோர் அன்பையும்,  பாசத்தையும் பொழிவார்கள். நாம் இறைவனிடம் கேட்கும் துவா அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். எப்பொழுதும் இறைகாவல் இருந்துக் கொண்டு இருக்கும்.

வாழ்க்கையில் உன்னத நிலையை அடைவார்கள்.

அரபி மற்றும் ஆங்கில எழுத்துக்களில் அல்லாவின் திருப்பெயர்கள் 99ஐ
எப்படி எப்படி ஓதவேண்டும் எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஓதவேண்டும் அதற்குரிய ஒழுங்குமுறைகள் என்னென்ன என்பதை திருமதி நசீம் அக்தர் தனது சொந்த அனுபவத்தில் ஓதி பலன் பெற்று உருக்கத்தோடு விவரிக்கிறார்,
Kazi.Mufti.Dr.Salahuddheen Mohammed Ayyub.
Govt.Chief Hazi, Royappettah
அவர்கள் சான்றிதழ் பெற்ற இந்நூல் 48 பக்கங்களில் 40 ரூபாய்க்கு கிடைக்கிறது.முஸ்லிம் சமுதாயமே ஒவ்வொரு இல்லத்திலும் வைத்திருக்க வேண்டிய பக்திப் பொக்கிஷம் இது 

தற்காலக் கிறித்தவத் தமிழ்ப் புதினங்கள்

 நாவல்கள், வரலாற்று நாவல்கள், களிப்பூட்டும் கற்பனை உலக நாவல்கள் என அவற்றை  வகைப்படுத்தலாம்.
உள்ளீட்டையும் உணர்த்தும் முறையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகள் மிக்க நாவல், பண்பு நலன் விளங்கும் நாவல், விளக்கமும் வருணனையும் மிக்க நாவல், நாடகப் போக்கினதாகிய நாவல் எனவும் அந்த வகை பெருகும்.கதைப்புலம், மாந்தர் படைப்பு, பன்னணி ஆகியவற்றின் அடிப்படையில் சமூகக் கொள்கை பரப்புப் புதினம், சிக்கல்களை அலசும் புதினம், துப்பறியும் புதினம், வட்டாரப் புதினம், புதிய அலைப்புதினம், நாடகப்பாங்கான புதினம், வரலாற்றுப் புதினம் என வகைப்படுத்தும் வழக்கமும் உண்டு.
 கிறித்தவர்களும்  தமிழில்  படைத்த புதினங்களை வரலாற்றுப் புதினங்கள், உரிமைப் போராட்டப் புதினங்கள், குடும்பச் சிக்கற் புதினங்கள், வட்டாரப் புதினங்கள், சாதீயப் புதினங்கள், பெண்மைப் புதினங்கள், நாட்டியற் புதினங்கள், அரசியற் புதினங்கள், திரைப்படப் புதினங்கள், உளவியற் புதினங்கள், சமயப் புதினங்கள், மொழிபெயர்ப்புப் புதினங்கள் எனப் பல்வகைகளில் எழுதியுள்ளனர்.
ஒரு படைப்பாளர், என்றோ நடந்து முடிந்து விட்ட நிகழ்ச்சிகளைத் தம் மனக்கண்முன் நிறுத்தி கதைமாந்தர்களைப் படைத்துத் தம்முடைய கற்பனையைக் கலந்து கலைத்திறன் கொண்டு படைப்பதை வரலாற்றுப் புதினம் . இவற்றில் எக்கால வரலாறு கதை நிகழ்ச்சியாக அமைகிறதோ அக்காலப் பழக்க வழக்கங்கள் ‹ழ்நிலைகள் தக்கவாறு இடம் பெற்றால் புதினம் சிறந்து விளங்கும்.
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகியவற்றில் இடம் பெறும் விவிலிய வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில்  கிறித்தவ வரலாற்றுப் புதினங்கள் தோன்றியுள்ளன.
தற்காலக் கிறித்தவத் தமிழ் வரலாற்றுப் புதின ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜெகசிற்பியன், டேவிட் சித்தையா, மதுரை இளங்கவின், கவியழகன், கவிஞர் அமலன், பி.ஏ. தாஸ் ஆகியோர் ஆவர். இவர்களுள் தலை சிறந்தவரான ஜெகசிற்பியன் கிறித்தவராயினும், சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே பனிரெண்டு புதினங்களைப் படைத்துள்ளார். டேவிட் சித்தையா பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வெறும் சிலைகளையும், புதிய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு புதிய வானம் புதிய பூமி என்ற புதினத்தையும் படைத்துள்ளார்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் வரலாற்றை ஒட்டியும், கிறித்தவ அடிகளார் தோமையார் வரலாற்றை ஒட்டியும் பத்துப் புதினங்கள் படைத்தவர் கவியழகன் ஆவார்.
கவிஞர் அமலனின் பரபாஸ் புதிய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது பி.ஏ. தாஸின் ‘இயேசுவின் அருள் பெற்ற மங்கை’ புதிய ஏற்பாட்டில் உள்ள சிறிய வரலாற்றுச் செய்தியினைக் கதை மூலமாகக் கொண்டு கற்பனை கலந்து படைக்கப்பட்டது.மேற்கண்ட புதினங்கள் வரலாற்று நிகழ்ச்சிகளை முழுமையாக அப்படியே எடுத்தாண்டு எழுதப்படுவதும், ஒன்றிரண்டு செய்திகளைக் கொண்டு கற்பனைக் கலந்து எழுதப்படுவதும் இருவகையினைச் சார்ந்தனவாக உள்ளன. கவியழகனின் ‘மண் சிவந்தது’ என்னும் புதினம் வரலாற்று நிகழ்ச்சிகள் மிகுந்து படைக்கப்பட்டது. ஆனால் பி.ஏ. தாஸின் ‘இயேசுவின் அருள்பெற்ற மங்கை’ விவிலியப் புதிய ஏற்பாட்டில் இடம்பெற்ற மேரி மகதலேனாள் பற்றிய மூன்று குறிப்புகளின் அடிப்படையிலேயே படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இவ்வாறு படைக்கப்பட்ட கிறித்தவ வரலாற்றுப் புதினங்கள் அனைத்தும் சமயம் பரப்பும் நோக்கத்தைக் கொணடனவாக உள்ளன. எனினும் பற சமயத்தினருக்கு உளம் நோகாதவாறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
கிறித்தவப் படைப்பாளர்கள் பலர் புரட்சிகளையும், போராட்டங்களையும் விளக்கும் கருத்துக்களையே தங்கள் படைப்புகளில் அதிகமாகக் காட்டுகின்றனர். இவை ஆண்டான் அடிமைப் போராட்டமாகவும், சாதிசமயப் போராட்டமாகவும், தனிமனிதப் போராட்டங்களாகவும் அமைத்துள்ளன.
டி. செல்வராஜ், ஐசக் அருமைராசன், டேனியல் ஜேக்கப், யோகநாதன், டேவிட் சித்தையா, கார்த்திகா ராஜ்குமார் போன்றோர் புதினங்கள் பல ஏட்டளவில் நின்று, இன்றும் ஏழை மக்களின் கைக்கு எட்டாத மனித உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும் என்ற உண்மையை எடுத்தியம்புகின்றன. மக்கள் தங்கள் தனி உரிமைக்காகவும், சமுதாய உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்ற, போராடித் தீரவேண்டிய நிலைகளைக் காட்டுகின்றன. இவை சாதிவழியில் தொழில் அமைப்பு, தீண்டாமை, வர்க்கப் பாகுபாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
போராட்டங்களை மட்டுமே தமது புதினங்களில் வடித்துக் காட்டுபவர் டி. செல்வராஜ். அவருடைய புதினங்களான தேனீர், மலரும் சருகும், மூலதனம் ஆகிய மூன்றிலும் வர்க்கப் போராட்டங்கள் முதலிடம் பெறுகின்றன.
டேனியலின் ‘பஞ்சமர்’, டேவிட் சித்தையாவின் ‘இனி ஒரு உதயம்’ ஆகிய இரண்டும் ‘சிவப்புக் கிறித்தவப் புதினங்கள்’ என்று குறிப்படப்பட்டுள்ளன. யோகநாதன் தனி மனிதன் அரசின் அடக்குமுறைகளுக்கு எப்படியெல்லாம் பலியாகின்றான்; அப்படி ஒடுக்கப்பட்டும் சளைக்காது எப்படிப் போராடுகிறான் எனத் தம் புதினங்கள் சிலவற்றில் விளக்குகிறார். கார்த்திகா ராஜ்குமார் அரசியல் செல்வாக்கால் தனிமனிதன் செய்யும் அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இளைஞனாக ஆனந்தைப் படைத்து அரசியல்வாதி சொக்கலிங்கத்தைச் சமுதாய நோயாக உருவகப் படுத்தியுள்ளார். அதை வெற்றி கொள்வது எளிதல்ல என்பதை எடுத்துரைத்துள்ளார். 

 
[left]டாக்டர் வி. ஆனந்த மூர்த்தி 
தமிழில் கிறிஸ்துவ நாவல்கள் பற்றிய வரலாற்று ரீதியான மிக முக்கியப் பதிவுகள் கொண்ட நூல் 
டாக்டர் வி. ஆனந்த மூர்த்தி 
M.A. (Tamil), M.A. (His.) M.A. ((Pol. Sc), M.A.(Eco), M.A. (Pub. Admn), M.A.(Soc.), M.A. (Joul.), M.A. (Phil.), M.A. (Pop.Edun.), M.A. (Gandhian), M.Com., M.Com., (Banking), M.Com., (Insurance). M.Ed., M.Lib.Sc.,Dip. in Telugu& Ph.D
 Price: Paper back: Rs.150/=        
[இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com