Sunday, 8 September 2019

ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவா, அருளிய நமது தர்மம்


Namathu Dharmam- forward- 
நமது தர்மம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவா, அருளிய நமது தர்மம் பற்றிய அருமையான அற்புதமான விளக்கங்கள். சாதாரணர்களுக்கும் புரியும் படியான, ஏற்றுக் கொள்ளும்படியான எளிமையான விளக்கங்கள் இந்தப் புத்தகத்தில் நம்மை வியக்கவைக்கின்றன.
1932 ம் வருடம் செப்டம்பர் மாதம் மகா பெரயவர்கள் சென்னை விஜயம் செய்தபோது அருளிய பொன்மொழிகளின் சாராம்சம் அடங்கிய பொக்கிஷம் இது. நம் மனசுக்குள் அன்றும் இன்றும் என்றும் நீங்கா இடம் பிடித்துக் கொண்டு நம்மை ஆட்டிப்படைக்கும் நம் மதம் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் தான் இந்தப் புத்தகம்.
‘எப்பவும் பாட்டி சொன்னா, தாத்தா சொன்னான்னு அதையேதான் செய்யணுமா, நமக்குன்னு தோணறதை செய்யக் கூடாதா?’
இந்தக் கேள்வி வராத குடும்பமே இருக்க முடியாது. பெரியவா அழகா விளக்கம் சொல்றார். “ நாமாக ஒன்றை பிடித்துக் கொண்டால் வீண் அலைச்சல். அது நல்லதோ கெட்டதோ என்று சந்தேகம். அதனால் முன்பே பெரியவர்களால் அனுஷ்டிக்கப்பட்டு நமக்கென்று ஏற்பட்ட தர்மத்தை பின்பற்றுவதே நல்லது.” என்கிறார்.
‘இஸ்லாமியர்களுக்கு குரான், கிறிஸ்தவர் களுக்கு பைபிள் ன்னு டக் னு சொல்ல ஒரு புனித நூல் இருக்கு. நமக்கு ஏன் எதை சொல்றதுன்னு தெரியாம ஒரே குழப்பமா இருக்கு?’
பெரியவா, தெளிவா விளக்கம் கொடுக்கிறார். ‘ நம்ம மதத்துல மதம் பற்றிய படிப்பே கிடையாது. தர்மம் என்பதுதான் நமது மதம். தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களுக்கு சாதனமாக இருப்பதுதான் மதம். இதை விளக்குவதற்கு புருஷார்த்தங்கள் எனப்படும் பதினான்கு வித்தியாஸ்தானங்கள் இருக்கின்றன. அவற்றை சிறு வயதிலேயே படிப்பது, படிப்பதை தெரிந்து கொள்வது. தெரிந்து கொண்டபடி நடப்பது, மற்றவர்களையும் அப்படியே நடந்து கொள்ள வைப்பது ‘ என்று  பெரியவா வாக்குகளைப் படிக்கும்போது நம் மனம் முழுவதும் பெரியவா ஆக்ரமித்துக் கொள்கிறார்.
திவச மந்திரத்தை ஏன் சமஸ்க்ருதத்தில்தான் சொல்லவேண்டும்?
பசி என்கிற வியாதிக்கும் வேறு வியாதிகளுக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் என்ன?
சங்கீதம் – சாஹித்யம் இரண்டுக்கும் வித்தியாசம் சொல்கிறார் பாருங்கள். படித்து அனுபவிக்க வேண்டும்.மோக்ஷத்தை பரலோகம் என்று பிற மதங்கள் சொல்கின்றன. நம் ப்ரமாண க்ரந்தங்கள் பரலோகம் என்கிற மோக்ஷத்தை இங்கேயே அடைய வழிகாட்டுகிறது. அதுதான் இந்து மதத்தின் தனி சிறப்பு.
இப்படி எத்தனையோ பொக்கிஷங்கள். படித்துப் பரவசமடைவதற்கு.
ஜெய ஜெய ஷங்கர ஹர ஹர ஷங்கர! காஞ்சி ஷங்கர, காமகோடி ஷங்கர!
பெரியவா சரணம்! குருவே சரணம்!
Dr.ஷ்யாமா ஸ்வாமிநாதன், 5/1௦/2௦17
Dharini Padhippagam, 
4 A,Ramea Flats
32/79 Gandhi Nagar 4th Main Road
Adyar, CHENNAI-600020
PH.24400135
Mobile:9940120341

No comments:

Post a Comment