Wednesday, 11 June 2014

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள் 
[இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com
இந்த மெகா சிறுகதைத் தொகுப்புக்கு கல்கி அளித்த கௌரவம்

Sunday, 9 February 2014

இயலா நிலையினருக்கான கல்வி



      இயலா நிலையினருக்கான கல்வி

1.
பார்வையற்றோர்


2.
குறைப்பார்வையுடையோர்


3.
காதுகேளாதோர்


4.
மனவளர்ச்சி குன்றியோர்



5.
கை கால் இயக்கக் குறைபாடு உள்ளோர்


6.
மூளை வாதம்


7.
கற்றலில் குறைபாடுள்ள


 மாற்றுத் திறனாளிகளுக்கு எளிய பயனுள்ள முறையில் கல்வி கற்பிப்பது எப்படி என்றும் அன்றாட வாழ்வில் அவர்கள் இயல்பாக இயங்க உதவுவது என்றும் விளக்கமான படங்களுடன் விவரிக்கும் நூல் இது
மேலும் அவர்களுக்கு

 

8.
ஊனமுற்றோர் இயக்குநரகம் மூலம் கிடைக்கும் உதவிகள்


9.
ஊனமுற்றோர்க்கு இந்திய அரசு வழங்கும் சலுகைகள்
விவரமாக விளக்கப்பட்டுள்ளன 


332 பக்கங்கள்  விலை. ரூபாய்.250/=

[இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 

Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com
 


                                

அல்லாவின் திருப்பெயர்கள் 99

அல்-கபீர் (பெரியவன்)
இதை அதிக அதிகமாக ஓதி வருபவர்கள் இறை ஞானம் பெற்று,  தீயவர்களிடமிருந்து விடுபடுவர். அவர்களுடைய மதிப்பு உயரும்,
அல்-ஹாபீஃஸ் (காப்பாற்றுவோன்)
இதனை ஓதுபவர்கள் விபத்திலிருந்தும், வனவிலங்குகளிடமிருந்து காப்பாற்றப்படுவார்கள். இறைகாவல் எப்பொழுதும் இருக்கும். தீமை அகலும்,  ஆபத்துக்கள் நீங்கும்.
அல்-முகீத் (உறுதிப்படுத்துவோன்)
இதை ஓதுபவர்கள் நோன்பு நோட்கும் ஆற்றல் பெறுவர்,  அயச்சம் அகலும்,  வறுமை,  தீயகுணம்,  பீடை அகலும். சகல நோய்களும் நீங்கும்.
இதை ஓதுபவருக்கு எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாப்பு பெறுவர்.  அச்சம் பயம் அகலும்,  தொற்று நோய்கள் அகலும்.
அல்-ஜலீல் (உயர்வானவன்)
இதை ஓதுபவர்கள் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெறுவர்,  இறையருள் கிட்டும்,  கண்ணியம் ஏற்படும்.
அர்-ரகீப் (கவனிப்பவன்)
இதை ஓதுபவருக்கு பரக்கத் ஏற்படும்,  வேதனைகள் அகலும்,  நீர் நெருப்பு,  பகைவர்கள், கள்வர்களிலிருந்து பாதுகாப்பு பெறுவர், பெற்றோர்கள் இதை அதிகமதிகமாக குழந்தைகள் நலமாக வாழ்வார்கள்.
அல்-முஜீப் (பதிலளிப்போன்)
இதை ஓதுபவருடைய மனைவி, மக்கள் சுற்றத்தார் நண்பர் ஆகியோர் அன்பையும்,  பாசத்தையும் பொழிவார்கள். நாம் இறைவனிடம் கேட்கும் துவா அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். எப்பொழுதும் இறைகாவல் இருந்துக் கொண்டு இருக்கும்.

வாழ்க்கையில் உன்னத நிலையை அடைவார்கள்.

அரபி மற்றும் ஆங்கில எழுத்துக்களில் அல்லாவின் திருப்பெயர்கள் 99ஐ
எப்படி எப்படி ஓதவேண்டும் எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஓதவேண்டும் அதற்குரிய ஒழுங்குமுறைகள் என்னென்ன என்பதை திருமதி நசீம் அக்தர் தனது சொந்த அனுபவத்தில் ஓதி பலன் பெற்று உருக்கத்தோடு விவரிக்கிறார்,
Kazi.Mufti.Dr.Salahuddheen Mohammed Ayyub.
Govt.Chief Hazi, Royappettah
அவர்கள் சான்றிதழ் பெற்ற இந்நூல் 48 பக்கங்களில் 40 ரூபாய்க்கு கிடைக்கிறது.முஸ்லிம் சமுதாயமே ஒவ்வொரு இல்லத்திலும் வைத்திருக்க வேண்டிய பக்திப் பொக்கிஷம் இது 

தற்காலக் கிறித்தவத் தமிழ்ப் புதினங்கள்

 நாவல்கள், வரலாற்று நாவல்கள், களிப்பூட்டும் கற்பனை உலக நாவல்கள் என அவற்றை  வகைப்படுத்தலாம்.
உள்ளீட்டையும் உணர்த்தும் முறையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகள் மிக்க நாவல், பண்பு நலன் விளங்கும் நாவல், விளக்கமும் வருணனையும் மிக்க நாவல், நாடகப் போக்கினதாகிய நாவல் எனவும் அந்த வகை பெருகும்.கதைப்புலம், மாந்தர் படைப்பு, பன்னணி ஆகியவற்றின் அடிப்படையில் சமூகக் கொள்கை பரப்புப் புதினம், சிக்கல்களை அலசும் புதினம், துப்பறியும் புதினம், வட்டாரப் புதினம், புதிய அலைப்புதினம், நாடகப்பாங்கான புதினம், வரலாற்றுப் புதினம் என வகைப்படுத்தும் வழக்கமும் உண்டு.
 கிறித்தவர்களும்  தமிழில்  படைத்த புதினங்களை வரலாற்றுப் புதினங்கள், உரிமைப் போராட்டப் புதினங்கள், குடும்பச் சிக்கற் புதினங்கள், வட்டாரப் புதினங்கள், சாதீயப் புதினங்கள், பெண்மைப் புதினங்கள், நாட்டியற் புதினங்கள், அரசியற் புதினங்கள், திரைப்படப் புதினங்கள், உளவியற் புதினங்கள், சமயப் புதினங்கள், மொழிபெயர்ப்புப் புதினங்கள் எனப் பல்வகைகளில் எழுதியுள்ளனர்.
ஒரு படைப்பாளர், என்றோ நடந்து முடிந்து விட்ட நிகழ்ச்சிகளைத் தம் மனக்கண்முன் நிறுத்தி கதைமாந்தர்களைப் படைத்துத் தம்முடைய கற்பனையைக் கலந்து கலைத்திறன் கொண்டு படைப்பதை வரலாற்றுப் புதினம் . இவற்றில் எக்கால வரலாறு கதை நிகழ்ச்சியாக அமைகிறதோ அக்காலப் பழக்க வழக்கங்கள் ‹ழ்நிலைகள் தக்கவாறு இடம் பெற்றால் புதினம் சிறந்து விளங்கும்.
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகியவற்றில் இடம் பெறும் விவிலிய வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில்  கிறித்தவ வரலாற்றுப் புதினங்கள் தோன்றியுள்ளன.
தற்காலக் கிறித்தவத் தமிழ் வரலாற்றுப் புதின ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜெகசிற்பியன், டேவிட் சித்தையா, மதுரை இளங்கவின், கவியழகன், கவிஞர் அமலன், பி.ஏ. தாஸ் ஆகியோர் ஆவர். இவர்களுள் தலை சிறந்தவரான ஜெகசிற்பியன் கிறித்தவராயினும், சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே பனிரெண்டு புதினங்களைப் படைத்துள்ளார். டேவிட் சித்தையா பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வெறும் சிலைகளையும், புதிய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு புதிய வானம் புதிய பூமி என்ற புதினத்தையும் படைத்துள்ளார்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் வரலாற்றை ஒட்டியும், கிறித்தவ அடிகளார் தோமையார் வரலாற்றை ஒட்டியும் பத்துப் புதினங்கள் படைத்தவர் கவியழகன் ஆவார்.
கவிஞர் அமலனின் பரபாஸ் புதிய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது பி.ஏ. தாஸின் ‘இயேசுவின் அருள் பெற்ற மங்கை’ புதிய ஏற்பாட்டில் உள்ள சிறிய வரலாற்றுச் செய்தியினைக் கதை மூலமாகக் கொண்டு கற்பனை கலந்து படைக்கப்பட்டது.மேற்கண்ட புதினங்கள் வரலாற்று நிகழ்ச்சிகளை முழுமையாக அப்படியே எடுத்தாண்டு எழுதப்படுவதும், ஒன்றிரண்டு செய்திகளைக் கொண்டு கற்பனைக் கலந்து எழுதப்படுவதும் இருவகையினைச் சார்ந்தனவாக உள்ளன. கவியழகனின் ‘மண் சிவந்தது’ என்னும் புதினம் வரலாற்று நிகழ்ச்சிகள் மிகுந்து படைக்கப்பட்டது. ஆனால் பி.ஏ. தாஸின் ‘இயேசுவின் அருள்பெற்ற மங்கை’ விவிலியப் புதிய ஏற்பாட்டில் இடம்பெற்ற மேரி மகதலேனாள் பற்றிய மூன்று குறிப்புகளின் அடிப்படையிலேயே படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இவ்வாறு படைக்கப்பட்ட கிறித்தவ வரலாற்றுப் புதினங்கள் அனைத்தும் சமயம் பரப்பும் நோக்கத்தைக் கொணடனவாக உள்ளன. எனினும் பற சமயத்தினருக்கு உளம் நோகாதவாறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
கிறித்தவப் படைப்பாளர்கள் பலர் புரட்சிகளையும், போராட்டங்களையும் விளக்கும் கருத்துக்களையே தங்கள் படைப்புகளில் அதிகமாகக் காட்டுகின்றனர். இவை ஆண்டான் அடிமைப் போராட்டமாகவும், சாதிசமயப் போராட்டமாகவும், தனிமனிதப் போராட்டங்களாகவும் அமைத்துள்ளன.
டி. செல்வராஜ், ஐசக் அருமைராசன், டேனியல் ஜேக்கப், யோகநாதன், டேவிட் சித்தையா, கார்த்திகா ராஜ்குமார் போன்றோர் புதினங்கள் பல ஏட்டளவில் நின்று, இன்றும் ஏழை மக்களின் கைக்கு எட்டாத மனித உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும் என்ற உண்மையை எடுத்தியம்புகின்றன. மக்கள் தங்கள் தனி உரிமைக்காகவும், சமுதாய உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்ற, போராடித் தீரவேண்டிய நிலைகளைக் காட்டுகின்றன. இவை சாதிவழியில் தொழில் அமைப்பு, தீண்டாமை, வர்க்கப் பாகுபாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
போராட்டங்களை மட்டுமே தமது புதினங்களில் வடித்துக் காட்டுபவர் டி. செல்வராஜ். அவருடைய புதினங்களான தேனீர், மலரும் சருகும், மூலதனம் ஆகிய மூன்றிலும் வர்க்கப் போராட்டங்கள் முதலிடம் பெறுகின்றன.
டேனியலின் ‘பஞ்சமர்’, டேவிட் சித்தையாவின் ‘இனி ஒரு உதயம்’ ஆகிய இரண்டும் ‘சிவப்புக் கிறித்தவப் புதினங்கள்’ என்று குறிப்படப்பட்டுள்ளன. யோகநாதன் தனி மனிதன் அரசின் அடக்குமுறைகளுக்கு எப்படியெல்லாம் பலியாகின்றான்; அப்படி ஒடுக்கப்பட்டும் சளைக்காது எப்படிப் போராடுகிறான் எனத் தம் புதினங்கள் சிலவற்றில் விளக்குகிறார். கார்த்திகா ராஜ்குமார் அரசியல் செல்வாக்கால் தனிமனிதன் செய்யும் அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இளைஞனாக ஆனந்தைப் படைத்து அரசியல்வாதி சொக்கலிங்கத்தைச் சமுதாய நோயாக உருவகப் படுத்தியுள்ளார். அதை வெற்றி கொள்வது எளிதல்ல என்பதை எடுத்துரைத்துள்ளார். 

 
[left]டாக்டர் வி. ஆனந்த மூர்த்தி 
தமிழில் கிறிஸ்துவ நாவல்கள் பற்றிய வரலாற்று ரீதியான மிக முக்கியப் பதிவுகள் கொண்ட நூல் 
டாக்டர் வி. ஆனந்த மூர்த்தி 
M.A. (Tamil), M.A. (His.) M.A. ((Pol. Sc), M.A.(Eco), M.A. (Pub. Admn), M.A.(Soc.), M.A. (Joul.), M.A. (Phil.), M.A. (Pop.Edun.), M.A. (Gandhian), M.Com., M.Com., (Banking), M.Com., (Insurance). M.Ed., M.Lib.Sc.,Dip. in Telugu& Ph.D
 Price: Paper back: Rs.150/=        
[இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com

யோகேஷ் மித்ராவின் இயேசு கிறிஸ்து

நோன்பு முடிந்ததும் அவருக்குப் பசி எடுத்தது .கடுமையான பசி எடுத்தால் எப்பேர்ப்பட்டபட்டவரும் தன்னை மறந்து தகாத எந்தச் செயலையும் செய்வார்கள் எண்ணத்தில் சாத்தான் அவர் முன் தோன்றினான்.
"நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால் சுற்றியுள்ள இந்த கற்களை ரோட்டித்துண்டுகளாக மாற்றுங்கள்" என்றான்.
வந்திருப்பவன் சாத்தான். தன்னைச் சோதிக்கிறான் என்று உணர்ந்து கிறிஸ்து விழிப்படைந்தார்.
"மனிதன் வெறும் ரோட்டித்துண்டுகளால் மட்டும் அல்ல; தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வாக்கினாலும் பிழைப்பான் என்று வேத நூல் கூறுகிறதே!" என்று பதில் தந்தார்.
அப்புறம் சாத்தான் இயேசுவை ஜெருசலேம் நகருக்குத் தூக்கிச் சென்றான். தேவாலயத்தின் உச்சியில் உள்ள உப்பரிகையில் நிறுத்தினான்.
"நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால் இங்கிருந்து கீழே குதியுங்கள், கர்த்தர் தம் தூதர்களுக்குக் கட்டளை இடுவார். அவர்கள் உம்மைக் கைகளிலே ஏந்திக்கொண்டு போவார்கள் என்று நீர் கூறிய அதே வேத நூலிலே எழுதியிருக்கிறதே!" என்றான்.




அதற்கு இயேசு,"உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்கக்கூடாது என்றும் வேத நூலிலே எழுதியிருக்கிறதே!" என்று சாத்தானுக்குப் பதிலடி கொடுத்தார்.
உள்ளத்தை உருக்கும் நடையில் மனம் தோய்ந்து யோகேஷ் மித்ரா எழுதிய இந்நூல்பல்லாயிரக்கணக்கில்  விற்பனையாகி ஆயிரமாயிரம் வாசித்துப் பாராட்டிப் புகழ்ந்த  நூல்.
60 படங்கள்                                                                                           206 பக்கங்கள் 

விலை. 200 ரூபாய் 

 [இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com


 

Friday, 7 February 2014

முல்லா கதைகள்










நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கிற, சொல்லிச் சொல்லிச் சிரிக்க வைக்கிற முல்லா  கதைகள் முதல் முதலாக பக்கத்துக்குப் பக்கம் படங்களுடன் வெளிவருகிறது.
ஜெயதாரிணியின் நீரோட்டமான தமிழ் நடையில் 

------------------------------------------------------------------------------------------------------------------------

 ஒரு பணக்காரர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அறுசுவை விருந்து ஒன்று நடைபெற்று. விருந்தில் அந்த ஊர் பிரமுகர்கள் பலரும் சாப்பிட்டவாறு அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.விருந்துண்ணுவோர் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார்.
பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் தங்கள் வீரப்பிரதாபங்களைக் குறித்துப் பொய்யும் புனை சுருட்டுமான பவ நிகழ்ச்சிகளைத் தாங்கள் சாதித்தாகக் கூறி ஏதோ பெரிய சாகசக்காரர்கள் போல் தற்பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்.
முல்லா எல்லாவற்றையும் தலை குனிந்து கேட்டுக் கொண்டிருந்தார்
உடனே அவர் அங்கிருந்த பிரமுகர்களை நோக்கி “உங்களுக்கு நான் செய்த வீரசாகசம் ஒன்றைச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.
“முல்லாவினால் கூட வீரசாகசங்கள் செய்ய முடியுமா?” என்று கூறி கலகலவென ஏளனமாகச் சிரித்த பிரமுகர்கள்” எங்கே உமது வீரசாகசத்தை கூறும் பார்ப்போம்” என்று கேட்டனர்.
“ஒரு தடவை ஒரு நடுக்காட்டில் பத்துப் பதினைந்து கொள்ளைக்காரர்களை நான் விரட்டி அடித்தேன் என் விருப்பம் போல் ஆட்டிப் படைத்தேன். நான் செல்லுமிடங்களுக்கெல்லாம் அவர்கள் நாய்களைப் போல என்னைப் பின்தொடர்ந்து ஒடிவந்தார்கள்” என்றார் முல்லா.
“அப்படியா? இது உண்மையிலேயே பெரிய விஷயந்தான். உம் பின்னால் அவர்கள் ஒடி வருவதற்கு அப்படி என்ன மந்திர மாயம் செய்தீர்?” என்று பிரமுகர்கள் வியப்போடு வினவினார்.
“அது அப்படியொன்றும் பெரிய விஷயம் அல்ல. அவர்களைக் கண்டதும் நான் பயந்து ஒடினேன்.  என்னைப் பிடிப்பதற்காகஅவர்கள் துரத்திக் கொண்டு வந்தார்கள்” என்றார் முல்லா.

இந்த நூலை வெளியிட்டவர்
தாரிணி பதிப்பகம், 4A, ரம்யா பிளாட்ஸ், 32/79, காந்திநகர் 4வது பிரதான சாலை, அடையார், சென்னை-600020,மொபைல்:994120341    

email: vaiyavan.mspm@gmail.com

கிளிக்கூடு



 [இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com
நாட்டியக்கலைக்கு அர்ப்பணம் ஆன ஒருவனைக் காதலும் காமமும் மாறி மாறித்துரத்திய கதை.  மனதை உயர்த்தும் நாவல்
300 பக்கங்கள் 200 ரூபாய் ....  கிளிக்கூடு
:நாவல்

.....அவள் விழிகள் சிவந்திருந்தன. மைக்கருமையில் அந்தச் சிவப்பு பளிச்சென்று தெரிந்தது
"உன்கண்ணு ரொம்பச் சிவந்திருக்கு"
"போதை தெளியலே"
சங்கர் காபியை சாசரில்ஊற்றாமலேயே பருகத்தொடங்கினான்
ஒரு வாய் குடித்துவிட்டு " இனிமே விஸ்கி குடிக்காதே" என்றான்..
"எப்பவும் நான் இப்படிக் குடிச்சதே இல்லே.நேத்திக்கு தான். உன்னோட தான்."
"நான் அந்த போதையைச் சொல்லலே"
அவன் நிமிர்ந்து பார்த்தான்.
அவள் துணிச்சலானவள் . வெளிப்படையானவள். இது பெண்களுக்குப் பொருந்தாது. எனினும் இவளுக்குப் பொருந்துகிறது. தனக்கே உரிய தனி அழகில்.
அவன் அரை கப்போடு நிறுத்திக்கொண்டு அவளிடம் நீட்டினான். அவள் ஒரு வாய் பருகிவிட்டுத் திருப்பிக் கொடுத்தாள்
அவன் வாங்கிக்கொண்டான்.
"ஒனக்கு அது பிடிக்கலேண்ணா எடுத்துடு" என்று அவளே முன்வந்து அந்த பிராவை அவன் சூட்கேசில் இருந்து எடுக்கப் போனாள்.
அவன் ரேணுவின் கைபிடித்துத் தடுத்தான்
தங்க வளையல்கள் அதிர்ந்தன.
"இருக்கட்டும்"
"ஒனக்குத்தான் நினைவுப் பரிசுகள்ளே நம்பிக்கை இல்லையே"
"குழந்தையான நினைவு நல்லது"
அவள் உதட்டில் நாணம் ஊர்ந்தது
சங்கர் அவளைக் குறுகுறுவென்று பார்த்தான்
ரேணு அவன் மூக்கைத் திருகி வலமும் இடமும் ஆட்டினாள்.  

Thursday, 6 February 2014

காற்றும் வெளிச்சமும்

 [இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com
 Name of the bookகாற்றும் வெளிச்சமும்[ஏராளமான படங்களுடன்]
Author-திருமங்கலம் .கோ.லக்ஷ்மிநரசிம்ஹன் 
Price Rs.40/=                  
ஏறி இறங்கிய படிகள்
    
    எழுத்தாளர் வையவன் அவர்கள் பற்றிய சிறு வரலாற்றுக்குறிப்பு இது. அவர் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல.  ஒரு பன்முக மனிதர்  வாழ்வை அலசி ஆராய அவர் ஏறி இறங்கிய படிகள் பற்பல.அவற்றுள் சிலவற்றின்  கோட்டுச் சித்திரங்களை இந்த நூலில் வழங்க முயன்றிருக்கிறேன்  ஒரு படி ஏறும்போதும் இறங்கும்போதும் சிறிது வெளிச்சம் கிட்டியிருக்கிறது. சிறிது காற்று வீசியிருக்கிறது. இவை உயிர் வாழ்வு இடையில் அறுந்துவிடாமல் இயற்கையாக அமைந்த உதவிகள். அவற்றைக் கருத்தில் கொண்டு அமைந்தது காற்றும் வெளிச்சமும் என்ற நூல் தலைப்பு.
 எத்தனை எத்தனையோ  மனிதர்கள்...எத்தனை எத்தனையோ மரங்கள்  செடிகள்  ..மலைகள்..மழைகள் நதிகள்...அலைகள் ..உயிரினங்கள் ..எல்லாவற்றையும் நேசித்து எல்லாவற்றோடும்   உடன் வாழ ஒரு மனிதன் பிறக்கிறான். அப்படி வையவனும்   பிறந்தார். நாட்டிற்கும் மனித மேம்பாட்டிற்கும் அவர் உழைத்தார். அப்படி  அவர்  வளர்ந்த கதை இது.  வரலாறு மகான்களுக்கும் மாமனிதர்களுக்கும் மட்டும் தான் உரிமையா என்ன?  ஆசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் கூட உரியது தான் 
       திருமங்கலம் .கோ.லக்ஷ்மிநரசிம்ஹன்                          

     வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் வையவனும் ஒருவராக வந்தார். கருமமே  கட்டளைக்கல் என்பது பொய்யாமொழி . அவரை ஏற்றி இறக்கிய கருமப்படிகளின் சிறு விளக்கம் இந்நூல். சுமார்  13 ஆண்டுகளுக்கும் மேலாக  அவரை நன்கறிந்த நான் மிக்க மகிழ்ச்சியோஇந்த நூலை எழுதினேன் . வெளியிட்ட பதிப்பாளருக்கு என் நன்றி  
                      திருமங்கலம் .கோ.லக்ஷ்மிநரசிம்ஹன்