Sunday, 9 February 2014

யோகேஷ் மித்ராவின் இயேசு கிறிஸ்து

நோன்பு முடிந்ததும் அவருக்குப் பசி எடுத்தது .கடுமையான பசி எடுத்தால் எப்பேர்ப்பட்டபட்டவரும் தன்னை மறந்து தகாத எந்தச் செயலையும் செய்வார்கள் எண்ணத்தில் சாத்தான் அவர் முன் தோன்றினான்.
"நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால் சுற்றியுள்ள இந்த கற்களை ரோட்டித்துண்டுகளாக மாற்றுங்கள்" என்றான்.
வந்திருப்பவன் சாத்தான். தன்னைச் சோதிக்கிறான் என்று உணர்ந்து கிறிஸ்து விழிப்படைந்தார்.
"மனிதன் வெறும் ரோட்டித்துண்டுகளால் மட்டும் அல்ல; தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வாக்கினாலும் பிழைப்பான் என்று வேத நூல் கூறுகிறதே!" என்று பதில் தந்தார்.
அப்புறம் சாத்தான் இயேசுவை ஜெருசலேம் நகருக்குத் தூக்கிச் சென்றான். தேவாலயத்தின் உச்சியில் உள்ள உப்பரிகையில் நிறுத்தினான்.
"நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால் இங்கிருந்து கீழே குதியுங்கள், கர்த்தர் தம் தூதர்களுக்குக் கட்டளை இடுவார். அவர்கள் உம்மைக் கைகளிலே ஏந்திக்கொண்டு போவார்கள் என்று நீர் கூறிய அதே வேத நூலிலே எழுதியிருக்கிறதே!" என்றான்.




அதற்கு இயேசு,"உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்கக்கூடாது என்றும் வேத நூலிலே எழுதியிருக்கிறதே!" என்று சாத்தானுக்குப் பதிலடி கொடுத்தார்.
உள்ளத்தை உருக்கும் நடையில் மனம் தோய்ந்து யோகேஷ் மித்ரா எழுதிய இந்நூல்பல்லாயிரக்கணக்கில்  விற்பனையாகி ஆயிரமாயிரம் வாசித்துப் பாராட்டிப் புகழ்ந்த  நூல்.
60 படங்கள்                                                                                           206 பக்கங்கள் 

விலை. 200 ரூபாய் 

 [இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com


 

No comments:

Post a Comment