Thursday, 6 February 2014

காற்றும் வெளிச்சமும்

 [இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com
 Name of the bookகாற்றும் வெளிச்சமும்[ஏராளமான படங்களுடன்]
Author-திருமங்கலம் .கோ.லக்ஷ்மிநரசிம்ஹன் 
Price Rs.40/=                  
ஏறி இறங்கிய படிகள்
    
    எழுத்தாளர் வையவன் அவர்கள் பற்றிய சிறு வரலாற்றுக்குறிப்பு இது. அவர் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல.  ஒரு பன்முக மனிதர்  வாழ்வை அலசி ஆராய அவர் ஏறி இறங்கிய படிகள் பற்பல.அவற்றுள் சிலவற்றின்  கோட்டுச் சித்திரங்களை இந்த நூலில் வழங்க முயன்றிருக்கிறேன்  ஒரு படி ஏறும்போதும் இறங்கும்போதும் சிறிது வெளிச்சம் கிட்டியிருக்கிறது. சிறிது காற்று வீசியிருக்கிறது. இவை உயிர் வாழ்வு இடையில் அறுந்துவிடாமல் இயற்கையாக அமைந்த உதவிகள். அவற்றைக் கருத்தில் கொண்டு அமைந்தது காற்றும் வெளிச்சமும் என்ற நூல் தலைப்பு.
 எத்தனை எத்தனையோ  மனிதர்கள்...எத்தனை எத்தனையோ மரங்கள்  செடிகள்  ..மலைகள்..மழைகள் நதிகள்...அலைகள் ..உயிரினங்கள் ..எல்லாவற்றையும் நேசித்து எல்லாவற்றோடும்   உடன் வாழ ஒரு மனிதன் பிறக்கிறான். அப்படி வையவனும்   பிறந்தார். நாட்டிற்கும் மனித மேம்பாட்டிற்கும் அவர் உழைத்தார். அப்படி  அவர்  வளர்ந்த கதை இது.  வரலாறு மகான்களுக்கும் மாமனிதர்களுக்கும் மட்டும் தான் உரிமையா என்ன?  ஆசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் கூட உரியது தான் 
       திருமங்கலம் .கோ.லக்ஷ்மிநரசிம்ஹன்                          

     வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் வையவனும் ஒருவராக வந்தார். கருமமே  கட்டளைக்கல் என்பது பொய்யாமொழி . அவரை ஏற்றி இறக்கிய கருமப்படிகளின் சிறு விளக்கம் இந்நூல். சுமார்  13 ஆண்டுகளுக்கும் மேலாக  அவரை நன்கறிந்த நான் மிக்க மகிழ்ச்சியோஇந்த நூலை எழுதினேன் . வெளியிட்ட பதிப்பாளருக்கு என் நன்றி  
                      திருமங்கலம் .கோ.லக்ஷ்மிநரசிம்ஹன்                                       

No comments:

Post a Comment